உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்த பிரபல கலை இயக்குநரும், நடிகருமான ஜி.கே,வின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
கோபிநாத் என்கிற ஜி.கே, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேல்லும், தங்கம், கலசம், கங்கா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் உடல் நலக் குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை ஜி.கே உயிரிழந்தார். முதலில் அவர் இன்று (செப்.21) 12.30 மணியவிள இறந்ததாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஜி.கே-வுக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும் ஹேமா என்ற மகள், கிருஷ்ணகாந்த் என்ற மகன் உள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு போரூரில் உள்ள மயானத்தில் நடக்கிறது.
சென்னை, வளசரவாக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையினர் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...