Latest News :

அமலா பாலின் புதிய காதலர்! - வைரலாகும் புகைப்படம் இதோ
Sunday July-12 2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த போதே திருமணம் செய்துக் கொண்ட அமலா பால், திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே விவாகரத்தும் செய்தார். விவாகரத்துக்குப் பிறகு அவரது முன்னாள் கணவரான இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டார்.

 

அதே சமயம், அமலா பாலும் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், பிரபல வட இந்திய பாடகர் ஒருவருடன் அமலா பாலுக்கு திருமணம் நடந்ததாக புகைப்படங்கள் வெளியானது. மேலும், அவருடன் அமலா பால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியின. அந்த புகைப்படங்கள் வெளியானதுக்கு பிறகு அவருடனான பழக்கத்தை அமலா பால் துண்டித்து விட்டார்.

 

தற்போது தான் தனியாகவே இருக்கிறேன், என்று சமூக வலைதளங்களில் பதிவிட்ட அமலா பால், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். கொரோனா ஊரடங்கினால் குடும்பத்தாருடன் இருக்கும் அமலா பால், அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், ”தனது புதிய காதலர் இவர் தான்” என்று புகைப்படம் ஒன்றை அமலா பால் வெளியிட்டுள்ளார். அதில் அமலா பால், கைக்கடிக்காரம் ஒன்றை அணிந்தபடி அமர்ந்துக் கொண்டிருக்கிறார். எங்கடா அமலா பாலின் காதலர், என்று தேடிப்பார்த்தால், அந்த கைக்கடிகாரம் தான் அவரது புதிய காதலர், என்று அமலா பால் பதிவிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தில் அவரது காதலரை தேடி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், அமலா பாலின் அழகிய புகைப்படத்தால் ஆறுதல் அடைவதோடு லைக் போட்டு வரவேற்பும் தெரிவித்துள்ளார்கள்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

 

Related News

6774

’இந்தியன் 2’ படத்திற்காக லைகா நிறுவனம் மேற்கொள்ளும் பிரமாண்ட விளம்பர பணிகள்!
Friday June-28 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...

’கொட்டேஷன் கேங்’ படம் சன்னி லியோன் மீதான உங்கள் பார்வையை மாற்றிவிடும் - நடிகை பிரியாமணி நம்பிக்கை
Friday June-28 2024

ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...