‘கோவா’, ‘கோ’ உள்ளிட்ட பல படங்களில் தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்த பியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அபியும் அணுவும்’ படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாக உள்ள இப்படத்தில் ஹீரோவாக டோவினோ தாமஸ் நடித்துள்ளார். பிரபல பெண் ஒளிப்பதிவாளரான பி.ஆர்.விஜயலட்சுமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
அம்மா, மகளுக்கு இடையிலான பாச உணர்வை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படம், இளசுகளை கவரும் அழகான மற்றும் துணிச்சலான காதலை சொல்லும் படமாகவும் உருவாகியுள்ளதாம்.
இப்படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால், ஹீரோ டோவினோ - ஹீரோ பியா இருவரும் உதட்டோடு உதடு வைத்து முதமிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை இருவரிடம் இயக்குநர் விவரித்த போது, எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதித்ததோடு, பெரும் ஒத்துழைப்போடு காட்சியில் நடித்தார்களாம்.
தற்போது, இந்த முத்தக்காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வர, ‘அபியும் அணுவும்’ படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரோஹினி, சுஹாசினி, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...