Latest News :

வனிதாவின் வழக்கறிஞரை வாழ்த்திய கமல்ஹாசன்!
Monday August-10 2020

பிக் பாஸ் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருக்கும் நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் தொடர்பாக எழுந்த சர்ச்சை மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வனிதாவின் திருமணத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பிரபலங்கள் இதை வைத்து தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள நினைக்க, அதற்கு வனிதா எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட ரீதியிலான நடவடிக்கையும் மேற்கொண்டார்.

 

இப்படி பிக் பாஸ் மூலம் பிரபலமான வனிதா தனது மூன்றாவது திருமணம் மூலமாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரபலமாகி வர, அவருடன் வழக்கறிஞர் ஸ்ரீதர் என்ற பெயரும் பல்வேறு தளங்களில் அடிபட்டது. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என முக்கியமானவர்களுக்கு வழக்கறிஞராக பணியாற்றும் ஸ்ரீதர்.எம், சென்னையின் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவார்.

 

பிரபல வழக்கறிஞர் மட்டும் இன்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராகவும் ஸ்ரீதர்.எம் பதவி வகித்து வருகிறார்.

 

இந்த நிலையில், இன்று பிறந்தநாள் காணும் வழங்கறிஞர்  ஸ்ரீதர்,எம்-க்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் அன்பு சகோதரர் திரு.ஸ்ரீதர்.எம் அவர்களின் பிறந்தநாளான இன்று அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மகிழ்வில் பங்கேற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

6876

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery