கொரோன பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நோயால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
இதற்கிடையே, சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதித்து வரும் நிலையில், இன்று பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிசை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் சினிமா துறையினர் பாதிக்கப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கையாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அவ்வபோது அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, சில துறைகளுக்கு அரசு தளர்வு அளிக்கப்பட்டதால், அவை செயல்பட தொடங்கிவிட்டது. ஆனால், சினிமாத்துறைக்கும் மட்டும் இதுவரை எந்த ஒரு தளர்வையும் அரசு அறிவிக்கவில்லை.
தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்திருக்கும் தமிழக அரசு, திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது, என்று கூறியதோடு, திரையரங்கங்கள் திறக்கவும் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதனால், பாதியில் நிற்கும் படங்களின் தயாரிப்பாளர்களும், படத்தை முடித்துவிட்டு ரீலீஸுக்கு காத்திருக்கும் தயாரிப்பாளர்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகராஷ்டிரா மாநிலத்தில் கூட சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழக அரசு சினிமா படப்பிடிப்பு விஷயத்தில் கெடுபிடி காட்டுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால் தானே அனுமதி தேவை, பிற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தினால் என்ன, என்று சிலர் யோசிக்க தொடங்கியுள்ளார்கள். அவர்களில் சிலர் அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, ‘அரண்மனை 3’ படத்தின் படப்பிடிப்பை ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஒன்றி படமாக்கிய சுந்தர்.சி, மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருந்தார். ஆனால், தற்போதைய சூழலில் அது கிடைக்காது என்பதால், தனது படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநில அரசிடம் அனுமதி பெற்று, அங்கேயே முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க முடிவு செய்துவிட்டாராம்.
அதனால், மொத்த படக்குழுவையும் ராஜாஸ்தானுக்கு அழைத்துச் செல்ல செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்களை தயார் செய்யுமாறு தனது குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
திரையரங்கங்கள் மூடப்பட்டதால் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ஒடிடி-யில் ரிலீஸ் ஆனது. அப்படத்தை தொடர்ந்து பல படங்கள் ஒடிடி-யில் வெளியாக, தற்போது சுந்தர்.சி-யின் முயற்சி வெற்றி பெற்றால் அவர் வழியில், மேலும் பல தயாரிப்பாளர்கள் பிற மாநிலங்களில் தங்கள் படங்களின் படப்பிடிப்பை நடத்த முயற்சிப்பார்கள்.
ஆக, தமிழக அரசின் கெடுபிடியால் தமிழ் சினிமா இடம் மாறவும் வாய்ப்புள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...