நடிகர், நடிகைகள் குறித்து சிலர் விமர்சித்து ஆபாசமாக பேசுவது சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது. மேலும், இதில் சில நடிகைகள் தொடர்ந்து ஈடுபடுவது கோலிவுட்டினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், மீரா மிதுன் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் பற்றியும், அவர்களது மனைவிகள் பற்றியும் மிகவும் ஆபாசமாக பேசி வருகிறார். இதற்கு பல கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, மீரா மிதுன் ஆபாசமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்று நடிகை ஷாலு ஷம்மு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஷாலு ஷம்முவுக்கு பதில் அளித்த மீரா மிதுன், “நீ விரைவில் ஜெயிலுக்கு போக போகிறாய், அதனால் வழக்கறிஞரை பார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன், அவரை ரவுடி கும்பலை சேர்ந்தவர் என்றும் விமர்சித்தார்.
மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு, அவருக்கு எதிராக தான் எடுக்க இருக்கும் நடவடிக்கை குறித்தும் கூறியிருக்கிறார்.
ஆக, சோசியல் மீடியாவில் அடுத்த குழாயடி சண்டை தொடங்கிவிட்டது. அதன் ஆரம்பமான வீடியோ இதோ,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...