‘டார்லிங்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிக்கி கல்ராணி, தொடர்ந்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நெருப்புடா’, ‘ஹரஹர மகாதேவகி’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை நிக்கி கல்ராணி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி தெரிந்ததால் பரிசோதனை செய்துக் கொண்ட அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் நிக்கி கல்ராணி, குணமடைந்து வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதோடு, தனது குடும்பத்தருக்கும், சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தங்களது வீடுகளில் இருந்தபடி சிகிச்சைப் பெற்று வருகிறார்கள், என்று கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக கொரோனாவால் பாதித்திருப்பதாக அறிவித்த முதல் தமிழ் சினிமா நடிகை நிக்கி கல்ராணி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...