’தெகிடி’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு, அப்படத்தை தொடர்ந்து ‘திருப்பயலே 2’, ‘மிஸ்டர்.லோக்கல்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர், தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’-வில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், இப்பிரச்சினைக்கு குறித்து பல ஊடங்களுக்கு பேட்டியளித்த ஷாலு ஷம்மு, அந்த தயாரிப்பாளர் யார்? என்பதை கூறவில்லை. பிறகு இது சம்மந்தமாக அவருக்கு சில எதிர்ப்புகள் வந்ததால், அமைதியானவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் ஷாலு ஷம்மு, முக்கியமான பிரச்சினை குறித்து புகார் அளிப்பதாக கூறப்படுகிறது. பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த சினிமா பிரபலம் குறித்து தான் ஷாலு ஷம்மு போலீஸ் புகார் அளிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதே சமயம், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்து இழிவாக பேசி வரும் மீரா மிதுன், மீது நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார் அளிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...