தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடுவதோடு பல திரைப்படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டார். மேலும், அவரது உடல் நிலை குறித்து சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரே வீடியோ லைவில் வந்து ரசிகர்களிடம் பேசியதால் நிம்மதியடைந்தனர்.
இந்த நிலையில், எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை, அவரது உடல் நிலை குறித்து இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது, எஸ்.பி.பி-யின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...