லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கிறது. இது குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும், வி,ஐ,டி பல்கலைகழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:
லயோலா கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களாக இருக்கிறார்கள். இந்த கல்லூரியில் படித்த 50க்கும் மேற்பட்டவர்கள் சினிமா துறையில் நடிகர்களாகவும் , டைரக்டர்களாகவும், ஊடகதுறையிலும் உள்ளனர். அவர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்படுகிறார்கள். நடிகர் ஜெயம்ரவி விஷால் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள். 2-வது நாள் நிகழ்ச்சி அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள்.
லயோலா கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ச.லாசர் அடிகளார் , முதல்வர் ம. ஆரோக்கியசாமி அடிகளார், முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குநர் தாமஸ் அடிகளார் ஆகியோர் கூறியதாவது, கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தவுள்ளோம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம், மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம், கல்லூரியின் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் லயோலா கல்லூரி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. சமூக பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்...
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ’தண்டேல்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...