பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தாலும், அவரது சினிமா வாழ்க்கையில் நடக்கும் சமீபத்திய சம்பவங்களால் அவர் பெரிதும் கவலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இயக்குநர் மிஷ்கின், விஷாலுக்கு எதிரியாக கருதப்படும் சிம்புவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார். இதற்கு சிம்புவும் ஓகே சொன்ன நிலையில், இப்படத்திற்கு இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அருண் விஜயை வைத்து ‘அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தவர் அதற்கான திரைக்கதையை முடித்துவிட்டாராம். ஆனால், அப்படம் தொடங்குவதிலும் சில சிக்கள்கள் எழ, கதாநாயகியை மையப்படுத்திய திரைக்கதை ஒன்றை முடித்திருப்பவர், அதையாவது உடனடியாக படமாக்கி விடலாம், என்று நினைத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, அக்கதையின் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சித்த மிஷ்கினிடம், கதையை கேட்ட நயன், தனக்கு இந்த கதை செட் ஆகாது, என்று கூறிவிட்டாராம்.
இந்த நிலையில், நயன்தாராவுக்கு பதில் வேறு ஹீரோயினை தேடிய மிஷ்கின், சமந்தாவை அனுகி கதையை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட சமந்தா, கொரோனா பிரச்சினை முடியும் வரை எந்த ஒரு புதுப்படத்தையும் ஒப்புக்கொள்ள கூடாது, என்ற முடிவில் இருப்பதாக கூறி நிராகரித்து விட்டாராம்.
இப்படி ஹீரோயின்களின் தொடர் நிராகரிப்பால் இயக்குநர் மிஷ்கின் கவலையில் இருக்கிறாராம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...