’காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலணி’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் மூலம் சினிமாவில் மட்டும் இன்றி ரசிகர்களிடமும் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குநர் செல்வராகவன். தற்போது ‘புதுப்பேட்டை’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்களில் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருப்பவர், திடீரென்று நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இயக்குநர்கள் பலர் நடிகராகி வந்தாலும், இயக்குநர் செல்வராகவனின் நடிப்பு அவதாரம் என்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. வசந்த் ரவி, பாக்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ராக்கி’ என்ற படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன், தான் செல்வராகவன் நடிகராகும் படத்தையும் இயக்குகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
பெண்ணை மையப்பத்திய இப்படத்திற்கு ‘சாணிக் காயிதம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்ட வெளியாகி வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படத்தின் மூலம் நடிகராகியுள்ள இயக்குநர் செல்வராகவனுக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் நடிகர் தனுஷ், “உங்கள் வலிமையான நடிப்பை இந்த உலகம் காணட்டும்.” என்று கூறியுள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...