டிவி நிகழ்ச்சிகளில் முதன்மை நிகழ்ச்சியாக உருவெடுத்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், செப்டம்பர் மாதம் ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது இதற்கான விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4-க்காக போட்டியாளர்கள் தேர்வும் வேகமாக நடந்து வர, சிலர் போட்டியாளர்களாக உறுதியும் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிக் பாஸ் குழு ஆலோசித்து வருகிறார்களாம்.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4-க்கு எதிராக சில ரசிகர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கியதும் சமூக ஆர்வலர்கள் சில நிகழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுப்பது வழக்கம், ஆனால் தற்போது ரசிகர்களே பிக் பாஸுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது பிக் பாஸ் குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதாவது, லடாக்கில் சீன ராணுவத்தின் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு சீன நிறுவனங்களையும், அதன் தயாரிப்புகளையும் மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். அதன்படி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து டைடில் ஸ்பான்சரான சீன நிறுவனமும் விவோ வெறியேற்றப்பட்டுவிட்டது.
அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு சீசனுக்கு விவோ தான் டைடில் ஸ்பான்சராக இருந்தது. அதன் பிறகு வேறு சில நிறுவனங்கள் டைடில் ஸ்பான்சராக இருந்த நிலையில், பிக் பாஸ் நான்காவது சீசனுக்கு மீண்டும் விவோ நிறுவனம் டைடில் ஸ்பான்சராக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காரணம், ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய விவோ, அதிகம் மக்கள் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை டார்கெட் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், பிக் பாஸ் சீசன் 4-க்கு டைடில் ஸ்பான்சராக விவோ இருந்தால், பிக் பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிப்போம், என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களிப் பதிவிட தொடங்கியிருப்பதோடு, பிறரையும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதையும் செய்வோம், என்று ஆவேசமாக பதிவிட்டு வருகிறார்கள்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...