தொலைக்காட்சி தொடர்களில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்ற ஒரு சிலர்களில் வாணி போஜனும் ஒருவர். ‘தெய்வ மகள்’ சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, வாணி போஜன் ஹீரோயினாக நடித்த ‘லாக்கப்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து மேலும் சிலப் படங்களில் நடித்து வருபவர், வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். அத்துடன், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், அவ்வபோது தனது புதிய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையே, வாணி போஜன் நயன்தாராவை அனைத்திலும் காப்பியடிக்கிறார், என்று ரசிகர்கள் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளார்கள். சின்னத்திரை நயன்தாரா என்று வாணி போஜனை ரசிகர்கள் அழைக்க, அதில் இருந்து அவர் அனைத்திலும் நயன்தாராவை ஃபாலோ செய்ய தொடங்கியிருக்கிறார். குறிப்பாக, அவரது உடைகள் அணைத்தும் நயனின் காப்பியாகவே இருப்பதாக சமூக வலைதளங்களில் வாணியை ரசிகர்கள் வறுத்தெடுக்க தொடங்கியிருக்கிறார்.
இது குறித்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவுக்கு கமெண்ட் போடும் ரசிகர்கள், வாணி போஜன், நயன்தாராவை காப்பியடிப்பதை நிறுத்திவிட்டு, தனது ஒரிஜினலை காட்ட வேண்டும், அவர் என்னதான் காப்பியடித்தாலும் நயன் போல ஆக முடியாது, என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள். இதனால், நடிப்பு உள்ளிட்ட அனைத்திலும் நயனை வாணி போஜன் காப்பியடிப்பதாக அவர் மீது தவறான இமேஜ் உருவாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...