Latest News :

’ஸ்பைடர்’ படத்தில் இணைந்த பிரபல பாடகர்
Wednesday July-19 2017

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ மிக பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது. ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல பாடகர் பிரிஜேஷ் சாண்டில்யா ஒரு பாடல் பாடியுள்ளார்.

 

இது குறித்து பிரிஜேஷ் சாண்டில்யா கூறுகையில், “ஏ.ஆர். முருகதாஸ், மகேஷ் பாபு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிவது எனது கனவாகும். சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ள இவர்கள் இன்னமும் எளிமையாக இருப்பதை கண்டு வியந்தேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்ததிற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இசைக்கு மொழிகளோ எல்லைகளோ இல்லவே இல்லை என்பதை நம்பும் எனக்கு, இப்பாடல் மூலம் தென்னிந்தியா சினிமாவில் நுழைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜ் சாரின் இசையில் நான் பாடியிருக்கும் இப்பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. இது ஒரு மாபெரும் ஹிட் பாடல் ஆகும் என உறுதியாக கூறுவேன். இசை பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் ஹாரிஸ் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு பெருமை. இப்பாடல் ரசிகர்களை நிச்சயம் கவர்ந்து மயக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

Related News

69

இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘அரண்மனை 2’ ஒடிடி தளத்தில் வெளியானது!
Saturday June-22 2024

சுந்தர்.சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா ஆகியோரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ திரைப்படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் படம் என்ற பெருமையோடு, ரூ...

சித்தார்த் நடிப்பில் உருவாகும் ‘மிஸ் யூ’!
Saturday June-22 2024

’சித்தா’ என்கிற உணர்வுப்பூர்மான கதையம்சம் கொண்ட வெற்றிப் படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘மிஸ் யூ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

சன்னி தியோல் மற்றும் கோபிசந்த் மிலினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 ஆம் தேதி தொடங்குகிறது!
Thursday June-20 2024

இந்தியாவையே தன் ’கதர் 2’  படம்  மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார்...