நயன்தாராவுக்கு இருக்கும் திருமண தடையால், அவரும் அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வேறு ஒரு விஷயத்திற்காகும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வருத்தப்பட்டிருக்கிறார். அது தான் ‘காதம்பரி’.
எங்கேயோ கேட்டது போல இருக்கும், ஆம், விக்னேஷ் சிவனுக்கு இயக்குநராக வெற்றியும், காதலியையும் கொத்த படம் ‘நானும் ரவுடி தான்’. இப்படத்தின் நாயகியாக நடித்த நயன்தாராவின் கதாப்பாத்திர பெயர் தான் ‘காதம்பரி’. தற்போது இந்த தலைப்பில் பேய் படம் ஒன்று உருவாகியுள்ளது.
அருள் என்பவர் இயக்கி, ஹீரோவாக நடித்து தயாரித்திருக்கும் ‘காதம்பரி’ திரைப்படத்தில் கதாநாயகியாக காசிமா ராஃபி நடித்திருக்கிறார். இவர்களுடன் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, செளமியா, மகாராஜன், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகியிருக்கும் ‘காதம்பரி’-யின் கதை ஆந்திரா அருகிலுள்ள ஒரு அடர்ந்த காட்டில் நடக்கிறது. ஒரே ஒரு வீட்டிற்குள் நடப்பது போன்று திரைக்கதை அமைத்திருக்கும் அருள், குறைந்த கதாப்பாத்திரங்கள், குறைந்த பட்ஜெட்டில், ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் திகில் படமாக இப்படத்தை இயக்கியிருக்கும் அருள், தமிழ் சினிமாவில் இதுவரை வந்த பேய் படங்கள் போல் அல்லாமல், இப்படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் வித்தியாசமாக கையாண்டிருக்கிறாராம்.
‘காதம்பரி’ படத்தின் டிரைலரை இயக்குநர் விக்னேஷ் சிவனை வைத்து வெளியிட வேண்டும் என்று முடிவு செய்த இயக்குநர் அருள், இது தொடர்பாக விக்னேஷ் சிவனிடம் கேட்ட போது, அவர் மறுத்துவிட்டாராம். காரணம், ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காதம்பரி கதாப்பாத்திரத்தை மறு உருவாக்கம் செய்து, அதே தலைப்பில் நயன்தாராவை வைத்து படம் எடுக்க திட்டமிட்டிருந்த விக்னேஷ் சிவன், தற்போது அந்த தலைப்பில் வேறு ஒரு படம் வருவதால் வருத்தப்பட்டாராம்.
விக்னேஷ் சிவன் மறுத்துவிட்டாலும், தமிழ் சினிமாவின் உள்ள பிரபலங்கள் பலர் ‘காதம்பரி’ படத்தின் டிரைலரை வெளியிட முன் வந்துள்ளனர். அதன்படி, நடிகைகள் பார்வதி நாயர், நீலிமா, இசை மற்றும் கிரிசா குரூப், நடிகர்கள் டேனியல் பாலாஜி, டேனியல் அன்னி போப், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் தயாநிதி, கணேஷ் சந்திரசேகரன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் ‘காதம்பரி’ படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...