Latest News :

சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு உயிர் காக்கும் மருந்துகளை வழங்கிய இயக்குநர்கள் சங்கம்
Wednesday August-19 2020

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் அந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் பெப்சி கூட்டமைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான 'கபசுர குடிநீர்' பொடியும் ஹோமியோபதி மருந்தான 'ஆர்கானிக்கம் ஆல்பம் - 30' ஆகியவை இயக்குநர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சங்க  செயலாளார் ஆர்.வி.உதயகுமார், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர், சினிமா சங்கங்களுக்கு இந்த உயிர் காக்கும் மருந்துகளை சங்கம் சார்பில் வழங்கி வருகிறார்கள்.

 

அதன் தொடர்ச்சியாக சினிமா பத்திரிகையாளர்களுக்கும் மேற்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான கபசுர குடிநீர் பொடியும், ஹோமியோபதி மருந்தான ஆர்கானிக்கம் ஆல்பம் - 30 யும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் வழங்க முன் வந்தனர்.

 

உடனடியாக நம் 65 ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் D.R.பாலேஷ்வர் அவர்களை தொடர்பு கொண்டு, 200 கபசுர குடிநீர் பாக்கெட்டுகளையும், 500 ஆர்கானிக்கம் ஆல்பம் - 30 ஹோமியோபதி மருந்து புட்டிகளையும் வழங்கி அவற்றை உட்கொள்ளும் முறையையும் விலக்கி ஒரு ஆடியோ பதிவையும் கொடுத்துள்ளனர்.

 

கொரோனா தொற்று ஏற்படாமல் மனித உயிர் காக்கும் மருந்துகள் என்பதால், சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டின் இன்றி அனைத்து சினிமா பத்திரிகையாளர்களுக்கும் இம்மருந்துகளை சினிமா பத்திரிகையாளர் சங்கம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6902

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery