டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். ஏன், டிவி பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களை கூட டிவி முன்பு உட்கார வைத்த பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழில் பதிப்பை கமல்ஹாசன் தொகுத்து வழங்க, மூன்று சீசன்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இதற்கிடையே, பிக் பாஸ் நான்காவது சீசனுக்காக மக்கள் ஆவலோடு காத்திருக்க கொரோனா பிரச்சினையால் நிகழ்ச்சி நடைபெறுவதி பெரும் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டதால், தமிழ் பிக் பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல் அரசு விதித்திருக்கும் கட்டுப்பாட்டுடன் பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பாக உள்ளதாகவும், அதற்கான விளம்பரப் படம் ஒன்றில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும், ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அந்த விளம்பரப் படம் தயாராகிவிட்டதாம். இன்னும் இரண்டு நாட்களில் அப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
பிக் பாஸ் ரசிகர்களுக்கு இது உண்மையிலேயே குட் நியூஸ் தான்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...