சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையுக்குள் நுழைந்திருக்கும் வாணி போஜனின் முதல் திரைப்படமே பெரிய வெற்றி என்பதால் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதிலும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக அவர் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில், கவிஞர் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசனுடன் வாணி போஜன் ஜோடி போடும் படத்திற்கு ‘தாழ் திறவா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகும் இப்படத்தை பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, பரணி சேகரன் இயக்குகிறார்.
தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கும் சிறிய ஊர் ஒன்றில், மறைந்திருக்கும் நாகரீகம் ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது. பிறகு அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அதை எப்படி சமாளித்து சரி செய்கிறார்கள், என்பதும் தான் படத்தின் கதை.
இதில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ தமிழில் 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்துள்ள லிசா என்ற பெண்ணும், லலித் என்ற பையனும் நடித்துள்ளார்கள். இரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.
சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இப்படத்திற்கு சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள். மணிகண்டன் படத்தொகுப்பு செய்ய, ராகவா குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுகி ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...