விஜய் படங்கள் ரிலீஸின் போது பல பிரச்சினைகளை சந்திப்பது வழகமாகிவிட்டது. துப்பாக்கி, தலைவா என்று அடுத்தடுத்து பிரச்சினைகளை சந்தித்து வந்த விஜய் படங்களின் வரிசையில் ‘மெர்சல்’-லும் இணைந்துள்ளது.
டீசர் வெளியாகி பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்க, ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்த நீதிமன்றம் தற்கால தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், டீசர் வெளியான ஒரே நாளில் அதிக லைக்குகள் பெற்று ‘விவேகம்’ படத்தின் உலக சாதனையை முறியடித்த ‘மெர்சல்’ படம் குறித்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்க, அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்காத வகையில், அஜித் ரசிகர்கள் ‘மெர்சல்’ படத்தை கலாய்க்க தொடங்கியுள்ளார்கள்.
லைக்குகளில் சாதனை நிகழ்த்திய ‘மெர்சல்’, டிஸ் லைக்கிலும் சாதனை புரிந்துள்ளதாம். அதாவது யுடியூபில் இதுவரை எந்த ஒரு வீடியோவும் பெறாத அளவுக்கு அதிகமான டிஸ் லைக்குகளை பெற்று ‘மெர்சல்’ சாதனை நிகழ்த்தியுள்ளதாம்.
இந்த விஷயத்தை வைத்து விஜையும், ‘மெர்சல்’ படத்தையும் ஓட்டு...ஓட்டு...என்று ஓட்டும் அஜித் ரசிகர்கள், ”இதிலுமடா...சாதனை!” என்று கலாய்ப்பதுடன், அதிக லைக்குகளில் சாதனை நிகழ்த்திய முதல் தமிழ்ப் படம் ‘விவேகம். அதிக டிஸ் லைக்குகளில் சாதனை நிகழ்த்திய் படம் ‘மெர்சல்’ போன்ற மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே இயக்குநர் அட்லியை வைத்து ‘மெர்சல்’ படத்தை கிண்டல் செய்து மீம்ஸ்கள் வெளியிட்ட அஜித் ரசிகர்கள், தற்போது படத்தின் டீசர் பெற்ற டிஸ் லைக்குகளை வைத்து வெளியிடும் மீம்ஸ்களால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் முழ்கியிருக்கிறார்கள்.
விடுமுறைக்கு போன விஜயை நிம்மதியா இருக்க விட மாட்டாங்க போல.
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்...
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ’தண்டேல்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...