Latest News :

அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘சூரரைப் பொற்று’
Tuesday August-25 2020

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த இப்படம் கொரோனா பிரச்சினையால் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது அமேசான் ப்ரைமில் வீடியோவில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வரும் அக்டோபர் மாதம் அமேசான் ப்ரைமில் ‘சூரரைப் போற்று’ நேரடியாக ரிலீஸ் ஆகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஒருவரது படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

 

நேரடி ஒடிடி ரிலீஸ் குறித்து கூறிய சூர்யா, “இயக்குநர் சுதாவிடம் கதையை நான் கேட்ட தருணத்தில், அதை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், இந்த படத்தை 2D என்டர்டெயின்மென்ட்டின் கீழ் தயாரிக்கவும் விரும்பினேன். கேப்டன் கோபிநாத்தின் பாத்திரம் எனக்கு ஒரு சவாலாக இருந்தபோதிலும், இறுதியாக எங்கள் படைப்பை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது! நாம் இதற்கு முன் சந்தித்திராத இப்போதிருக்கும் இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் தங்கள் வீடுகளிலிருந்து ‘சூரரை போற்று’ படத்தை பார்க்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம் எங்கள் அன்பின் உழைப்பு, இது இப்போது உலக பார்வையாளர்களை மகிழ்விக்கப் போகிறது என்பதில் சந்தோஷமாக உணர்கிறேன்.” என்றார்.

 

அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனத்தின் இந்திய இயக்குநர் விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், “சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்துக்கு எங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’வின் உலகளாவிய பிரீமியர் மூலம் எங்கள் பார்வையாளர்களுக்கு விருந்தளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அமேசான் ப்ரைம் வீடியோவில். ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையும் சாதனைகளும் பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். மேலும் இதுபோன்ற ஒரு மேம்பட்ட கதையை எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

 

இயக்குநர் சுதா கொங்கரா கூறுகையில், “சூர்யாவை இயக்குவது ஒரு மகிழ்ச்சியான விஷயம். கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்திற்கு அவர் தான் எனது முதல் மற்றும் கடைசி தேர்வாக இருந்தார். அமேசான் ப்ரைம் வீடியோவில் படத்தை பிரீமியர் செய்வது ஒரு புதிய அனுபவம் மற்றும் அதை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உலகெங்கிலும், பல்வேறு வகையான மக்கள் இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்பது ஒரு படைப்பாளருக்கு உற்சாகமாமான விஷயம் தான்.” என்றார்.

 

’சூரரைப் போற்று’ திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6910

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery