கொரோனா பிரச்சினையால் திரையரங்கங்கள் மூடப்பட்டதோடு, படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், சினிமாத் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்த கொரோனா பிரச்சினையை கண்டு துவண்டு விடாமல், அதில் ஒரு படத்தை இயக்கி முடித்து, கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் ராஜு.
கொரோனா பிரச்சினையால் தான் இயக்கி வந்த ‘சூர்ப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், குறைந்த குழுவினருடன் பணிபுரியும் வகையில் கதை ஒன்றை கார்த்திக் ராஜு எழுதி முடித்திருக்கிறார். நல்ல த்ரில்லர் கதையாக அமைந்த அக்கதையை தானே தயாரிப்பதாக ‘சூர்ப்பனகை’ தயாரிப்பாளர் ராஜசேகர் வர்மா முன்வர, உடனடியாக அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, 28 நாட்களில் முழு படத்தையும் முடித்துவிட்டார்கள்.
இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை மையப்படுத்திய இப்படத்தில் ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள, இப்படத்தின் தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் 'கைதி' படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, திலிப் சுப்பராயண் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
முறையான அனுமதி பெற்று திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்த படக்குழு, படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், இன்று டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.
யூகிக்க முடியாத விதத்தில் சுவாரஸ்யமான காட்சிகளுடனும், நல்ல காமெடிக் காட்சிகளுடனும் உருவாகியுள்ள த்ரில்லர் படமான இப்படத்தின் பஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...