மனோரமா, கோவை சரளா போன்றவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும், தமிழ் சினிமாவின் காமெடி நடிகைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர் வித்யூலேகா. குணச்சித்திர நடிகர் மோகன் ராமனின் மகளான இவர், கெளதம் மேனனின் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து ‘ஜில்லா’, ’வீரம்’, ‘மாஸ்’, ‘புலி’, ‘வேதாளம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே, குண்டாக இருந்த வித்யூலேகா திடீரென்று தனது உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும், தனது புதிய தோற்றத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கினார்.
இந்த நிலையில், வித்யூலேகாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கில் மிக எளிமையாக நடைபெற்ற தனது திருமண நிச்சயதார்த்தம் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வித்யூலேகா, தனது திருமணம் மற்றும் வருங்கால கணவர் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன், என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவில் பிஸியாக வலம் வரும் வித்யூலேகா, உடல் எடையை குறைத்ததால் காமெடி மட்டும் இன்றி சில சீரியஸான கதாப்பாத்திரங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டப் போகிறாராம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...