சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் சில நடிகைகள், ஒரே ஒரு காட்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள். காரணம், அவர்கள் நடிக்கும் சில கதாப்பாத்திரங்கள் அப்படி அமைந்துவிடுகிறது. அந்த வகையில், சாய் ரமணி இயக்கத்தில் ஜீவா இரட்டை வேடத்தில் நடித்த ‘சிங்கம் புலி’ படத்தில் இளம் பெண்ணுக்கு அம்மாவாக ஒரு சில காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நீலு.
இவர் அதற்கு முன்பு ‘ஆயுத எழுத்து’, ‘வில்லன்’, ‘ஆஞ்சநேயா’, ‘குண்டக்க மண்டக்க’ என்று பல படங்களில் நடித்திருந்தாலும், ‘சிங்கம் புலி’ படத்தின் மூலம் பிரபலமாகிவிட்டார். இளம் பெண்ணுக்கு அம்மாவான இவரை ஜீவா சைட் அடிப்பதோடு, இவரது மகளையும் சைட் அடிப்பார். ஒரே வீட்டில் இருக்கும் இருவரையும் ஜீவா ஒன்றாக வைத்து சைட் அடிக்க, அந்த நேரத்தில் சாலையில், பசு மற்றும் கன்றை ஒருவர் ஓட்டிச் செல்வது போன்ற காட்சியையும் இயக்குநர் சாய் ரமணி வைத்திருந்தார்.
இரட்டை அர்த்தம் கொண்ட இந்த காட்சியின் மூலம் பிரபலமான நீலுவை ரசிகர்கள் செல்லமாக ஆண்டி என்று அழைக்க தொடங்கி விட்டார்கள். மேலும், அவரது புகைப்படங்களை வைத்து டிரால் செய்யவும் தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், ‘சிங்கம் புலி’ படத்தில் தன்னை மிக ஆபாசமாக காட்டியதாக பேட்டி ஒன்றில் புகார் கூறியிருக்கும் நடிகை நீலு, அப்படத்தினால் தான், நடிப்பதையே தான் நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.
முதலில், காட்சியை விவரித்த போது, ஏதோ சைட் அடிக்கும் காட்சி, என்று விவரித்தார்களாம். பிறகு அதை படமாக்கும் போது அதிக காட்சிகள் இருந்ததால் அவர் மகிழ்ச்சியாக நடித்தாராம். ஆனால், அதை திரையில் பார்க்கும் போது பெரும் ஆபாசமாக காட்டியுள்ளார்கள். அது பற்றி தன்னிடம் எதுவும் கூறவில்லை, என்று தெரிவித்த நீலு, அப்படிப்பட்ட காட்சியில் நடித்ததால் தனது குடும்பத்தில் சில சிக்கள்களும் ஏற்பட்டதாகவும், அதனால் நடிப்பதையே தான் நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...