திமுக - அதிமுக என்று இருந்த தமிழக அரசியல் தற்போது கமல்ஹாசன் - ரஜினிகாந்த் என்று மாறியிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், அந்த கூட்டத்தில் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதால், அவர் அரசியல்லு வருவார் என்ற பேச்சு அடிபட்டது. இருந்தாலும், தனது படங்கள் ரிலீஸ் நேரத்தின் போது ரஜினிகாந்த் பேசும் விளம்பர அரசியால் தான் இது, என்றும் கூறப்பட்டது.
ஆனால், ரஜினிகாந்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், அவர் அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்ய, அவரும் மறைமுகமாக தமிழக அரசியலின் ஆழத்தை சோதித்துக்கொண்டு தன் இருந்தார்.
இதற்கிடையே, அதிமுக அரசை நேரடியாக விமர்சனம் செய்த கமல்ஹாசன், தமிழக அரசியலில் திடீர் ஹீரோவாக ஒட்டு மொத்த மக்களின் பார்வையும் அவர் மீது விழுந்தது. சமூக வலைதளத்தில் அரசியல் கருத்து மட்டும் இன்றி, சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அடிக்கடி சுட்டிக்காட்டியதோடு, தனது சூடான கண்டனத்தையும் கமல் வெளியிட்டு வந்ததால், கமலும் அரசியலுக்கு எண்ட்ரி ஆகிறார் என்ற தகவல் பரவியது.
அதேபோல், கமலும் சூசகமாக தான் அரசியலுக்கு வரப்போவதை உணர்த்தியவர், கடந்த சில தினங்களில் தான் அரசியலுக்கு வருவது மட்டுமல்ல, தமிழக மக்களின் முதல்வராகவும் ஆக விரும்புவதாக கூறினார். மேலும், ரஜினிகாந்த் விருப்பப்பட்டால் தனது கட்சியில் அவரை சேர்த்துக்கொள்வேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனை நேரில் சந்தித்ததை தொடர்ந்து, அரசியலில் கமல்ஹாசனின் செல்வாக்கு உயர்த்திருப்பதோடு, சினிமா பிரபலங்கள் பலரது ஆதரவும் கமல்ஹாசனுக்கு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் ஈடுபாட்டில் கமல்ஹாசன் நாளுக்கு நாள் உயரத்திற்கு சென்றுக்கொண்டிருக்க, முதலில் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய ரஜினிகாந்த், தற்போது ஓரம் கட்டப்பட்டு வருகிறார்.
கமல் - ரஜினி இருவரும் அரசியலுக்கு வந்தால், தமிழக மக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கும் என்ற கருத்து கணிப்பில் கமல்ஹாசனே வெற்றி பெற்றுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டும் இன்றி, ரஜினிகாந்த் தமிழர் அல்ல என்ற கருத்து மேலோங்க செய்வதுடன், அவர் பா.ஜ.க-வுக்கு ஆதரவானர் என்பதை நிரூபிக்கும் விதத்தில், மக்கள் வெறுத்த மோடியின் திட்டத்திற்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது, தமிழக மக்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது.
மேலும், சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கமல்ஹாசனை சந்தித்தது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த, அதை முறியடிக்கும் விதமாக, பிரதமர் மோடி அறிவித்த புதிய திட்டத்திற்கு தான் ஆதரவு தருவதாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால், அவரது அந்த பதிவு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனதில், அவர் ரொம்பவ்வே அப்சட்டாகிவிட்டாராம்.
மொத்தத்தில், தமிழக அரசியலை பொருத்தவரை, கமலுடன் ரஜினி போட்டியிட்டால் அவர் ஓரம் கட்டப்பட்டுவிடுவார், என்றே அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...