பிக் பாஸ் சீசன் 4 இம்மாதம் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சில போட்டியாளர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ போட்டியாளர்கள் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4-ல் சனம் ஷெட்டி போட்டியாளராக கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஏற்கனவே வெளியானது தான் என்றாலும், சனம் ஷெட்டி மூலம் பிக் பாஸ் குழு வைத்திருக்கும் சீக்ரெட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3-ன் முக்கிய போட்டியாளராக திகழ்ந்த தர்ஷனுக்கும், சனம் ஷெட்டிக்கும் இடையே காதல் இருந்ததோடு, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். பிக் பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமாகி, சினிமா வாய்ப்புகள் வந்த உடன், தர்ஷன் சனம் ஷெட்டியை கழட்டிவிட்டுவிட்டதும், அதற்காக அவர் மீது சனம் ஷெட்டி போலீஸில் புகாரும் அளித்திருந்தார்.
தற்போது சனம் ஷெட்டி, தர்ஷன் பற்றியும், அவர் தன்னை ஏமாற்றியது பற்றியும் பேசுவதை நிறுத்தி விட்ட நிலையில், அவர் போட்டியாளராக, பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது தர்ஷனுக்கும், தனக்கும் இடையே இருந்த காதல் மற்றும் தர்ஷன் தன்னை ஏமாற்றியது குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை ஒளிபரப்பான மூன்று சீசன்களிலும், பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த காதல் கலாட்டாக்கள் தான் பரபரப்பாக இருந்தது. ஆனால், தற்போது ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நான்காவது சீசனை பொருத்தவரை, வெளியே நடந்த பரபரப்பான விஷயங்களை வைத்து நிகழ்ச்சிக்கு ஹைப் ஏற்ற பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சனம் ஷெட்டி - தர்ஷன் காதல் விவகாரம் பிக் பாஸ் சீசன் 4-ன் ஹைலைட்டாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது சீசனை காட்டிலும், நான்காவது சீசனை மிகப்பெரிய அளவில் நடத்த பிக் பாஸ் குழு முடிவு செய்து அதற்கான பணியில் தீவிரம் காட்டி வர, சனம் ஷெட்டியும் தன்னை ஏமாற்றிய தர்ஷனுக்கு ஆப்பு வைக்க சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருக்க, தற்போது இவர்கள் கூட்டணி அமைத்திருப்பது, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லலாம்.
சனம் ஷெட்டி பிக் பாஸ் சீசன் 4-ன் போட்டியாளராக பங்கேற்பது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், அவர் இது குறித்து எந்தவித மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...