சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம் ‘நிமிர்ந்து நில்’. ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் கதாநாயகியாக அமலா பால் நடித்திருந்தார். இரண்டாவது கதாநாயகியாக கன்னட நடிகை ராகினி திவேதி நடித்திருந்தார். இவர் காவேரி பிரச்சினையின் போது தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது, என்று கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கில் பல நடிகர், நடிகைகள் பெயர் அடிபட்டு வருகிறது.
இதற்கிடையே, கன்னட சினிமா இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர், போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பெயர் பட்டியலை போலீசிடம் வழங்கினார். அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய கர்நாடக காவல்துறை, நடிகை ராகினி திவேதியை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு செல்லவில்லை.
பிறகு, நடிகை ராகினி திவேதி சார்பில் அவரது வழக்கறிஞர் போலீசாரை சந்தித்து அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் ராகினி திவேதி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ராகினி திவேதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைது செய்யப்பட்டிருக்கும் நடிகை ராகினி திவேதியிடம் போலீசார் நடத்தும் விசாரணைக்குப் பிறகு மேலும் சில கன்னட நடிகர், நடிகைகள் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...