கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘பச்சை விளக்கு’ என்ற திரைப்படம் பத்திரிகையாளர்களிடம் வெகுவாக பாராட்டு பெற்றது. ”மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம்” என்று பல பத்திரிகைகள் பாராட்டிய இப்படத்திற்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
டாக்டர்.மாறன் இயக்கி நடித்த இப்படம், காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி, அதன் மூலம் அவர்களை ஆபாசப் படம் எடுத்து, அதை வைத்து பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்துக் காட்டியது. மேலும், சாலை பாதுகாப்பு என்றால் என்ன? என்பது குறித்து விவரித்ததோடு, இதுவரை எந்த திரைப்படத்திலும் சொல்லாத சில சாலை விதிகளையும் சொல்லியிருந்தது.
பூடான் நாட்டில் உள்ள பரோ என்ற இடத்தில் நடைபெற்ற ‘ட்ரக்’ என்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது.
மேலும், இந்தியாவில் நடைபெற்ற ‘ட்ரிப்விள்’ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருதையும் இப்படம் வென்றுள்ளது. அதேபோல், நியூயார்க், லண்டன் போன்ற இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வ தேர்வாக இப்படம் கலந்துக் கொண்டுள்ளது.
இது குறித்து நடிகரும், இயக்குநருமான டாக்டர்.மாறன் கூறுகையில், “முதல் முயற்சிக்கு கிடைத்த இந்த பாராட்டு, இன்னும் நல்ல படங்களை தருவதற்கு, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...