கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அவரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 4 அல்லது 11 ஆம் தேதி முதல் பிக் பாஸ் 4 ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதோடு, 14 பேர் கொண்ட பட்டியல் ஒன்று ரெடியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமானதாக வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்துக் கொள்ள கூடும், என்று வனிதா கூறிய வாக்கு தற்போது பலித்திருக்கிறது.
தான் மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்ட பீட்டர் பாலின் மனைவி எலிசபெத், காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி வித்யா போல குடும்ப பிரச்சினை மூலம் பிரபலமாகி, பிக் பாஸ் போன்ற டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முயற்சிப்பதாக, வனிதா கூறியிருந்தார். அவர் கூறியது தற்போது நடந்திருக்கிறது.
ஆம், பிக் பாஸ் சீசன் 4-ல் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் பங்கேற்க போகிறாராம். தற்போது அவரிடம் பிக் பாஸ் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அவர் நிச்சயம் இதில் பங்கேற்பார், என்றும் கூறப்படுகிறது.
வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன், என்ற பெயரில் அவரை மிக ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு, அதனால் கைதாகி பிறகு ஜாமினில் வெளியே வந்த சூரியா தேவி என்ற பெண் ஏற்கனவே பிக் பாஸ் போட்டிக்காக தேர்வாகியிருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது எலிசபெத்தும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதால், இந்த நான்காம் சீசனில் காதல் கலாட்டாவாக அல்லாமல் குடும்ப கலாட்டவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...