தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்க தொடங்கியுள்ளார். நடிக்க தெரிந்த நடிகை, என்று பெயர் எடுத்திருக்கும் இவர், இந்த இடத்தை அடைய பல தடைகளை கடந்து வந்த நிலையில், தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆம், “இந்தி தெரியாது போடா” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் அணிந்துக் கொண்டு, அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு, தனக்கு இந்தி தெரியும், என்று சொல்லும் வீடியோ காட்சியை சிலர் பகிர்ந்து, “நீங்க இந்தி பேச கத்துக்குவீங்க, பணம் சம்பாதிப்பீங்க, பிறகு இந்தி தெரியாது போடா, என்று சொல்வீங்க. ஆனால், நாங்க மட்டும் குண்டு சட்டியில குதிரை ஓட்டணுமா?” என்று கேட்டுள்ளார்.
பலர் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, பணத்திற்காகவும், பப்ளிசிட்டிக்காவும் இப்படியும் செய்வீர்களா, என்றும் விமர்சித்து வருகிறார்கள்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...