பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் இரண்டு புரோமோக்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களின் பட்டியல் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஆனால், இவை எதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், அந்த தகவல்கள் வைரலாகி வருகிறது. அதே சமயம், தற்போது வெளியாகியுள்ள போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக வர உள்ளவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிக் பாஸ் 4-ல் போட்டியாளராக பங்கேற்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே பிக் பாஸ் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நான்காவது சீசனின் பங்கேற்க பலர் விரும்பவில்லையாம். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பினர் இதுவரை சுமார் 500 பேர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், இந்த 500 மக்களுக்கு தெரிந்த முகங்களாக இருப்பவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாது, என்று நிராகரித்து விட்டார்களாம்.
இதன் காரணமாகவே, டிக் டாக் இலக்கியா, வனிதாவை வசைப்பாடிய சூரியா தேவி போன்றவர்களை போட்டியாளர்களாக பிக் பாஸ் குழு தேர்வு செய்துள்ளதாம்.
சினிமா பிரபலங்கள் அல்லாமல், சமூக வலைதளம் மூலம் பிரபலமானவர்கள் மற்றும் சில மாடல்களை போட்டியாளர்களாக கொண்டு பிக் பாஸ் 4 ஒளிபரப்பானால், கடந்த மூன்று சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், இந்த சிக்கலை சமாளிக்க, முதலில் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தொடங்கிவிட்டு, பிறகு போட்டியாளர்களாக சில முக்கிய பிரபலங்களை களம் இறக்கலாம், என்ற யோசனையோடும் பிக் பாஸ் குழு இருக்கிறதாம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...