பிக் பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், தனது மூன்றாவது திருமணத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பீட்டர் பாலை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்ததால், அவருக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரது முதல் மனைவி எலிசபெத் காவல் துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து தனக்கும், வனிதாவுக்கும் நடந்தது திருமணம் அல்ல, அன்பின் பரிமாற்றம், என்று பீட்டர் பால் கூறினாலும், அவர் வனிதாவுடன் வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பாலுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள பீட்டர் பாலுக்காக வனிதா சில சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார். அதன்படி, தனது வீட்டில் இருக்கும் குபேர லக்ஷ்மிக்கு வனிதா சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.
தனது இரண்டு மகள்கள் மற்றும் பீட்டர் பாலை வைத்துக் கொண்டு வனிதா இந்த சிறப்பு பூஜையை நடத்தியதோடு, தனது மூன்றாவது கணவருடன் பணத்தில் ஆன மாலையை அணிந்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படட்தை பார்த்த ரசிகர்கள் பலர், வனிதாவுக்காக பீட்டர் பால் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...