கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பல முன்னணி பிரபலங்கள் பிக் பாஸில் பங்கேற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, முன்னணி பிரபலங்கள் போட்டியாளர்களாக வர மறுப்பு தெரிவித்ததால், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகைகள் பலரிடம் பிக் பாஸ் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். அதன்படி, இதுவரை சுமார் 500 பேரிடம் பிக் பாஸ் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும், இதில் பலர் சமூக வலைதளங்களில் சர்ச்சையான விஷயங்களை பேசி பிரபலமனவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறிய நடிகை ஷாலு ஷம்முவிடமும் பிக் பாஸ் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்களாம். ஏற்கனவே பேட்டிகளில் தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளதாக கூறியிருந்த ஷாலு ஷம்முவுக்கு தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துவிடும் என்றே கூறப்படுகிறது.
அதே சமயம், தன்னை பிக் பாஸ் குழுவினர் தொடர்பு கொண்டு பேசியிருப்பது உண்மை தான், ஆனால், இதுவரை போட்டியில் நான் பங்கேற்பது உறுதியாகவில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...