பாலிவுட் மற்றும் கன்னட சினிமாக்களில் பிரபலங்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக காவல்துறை விசாரணை மேற்கொண்டதோடு, நடிகைகள் ரியா சக்ரபோர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பலரை கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட நடிகைகளிடம் போலீசார் நடத்தி விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது போதைபொருள் விவகாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும், பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளருமான சுரேஷ் குமார், மலையாள திரையுலகிலும் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் இந்த புகாரால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதோடு, நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை மலையாள சினிமாவிலும் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார், என்று தொடர்ந்து செய்திகள் வெளியாவதால், தற்போது இந்த விவகாரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெயரும் அடிபட்டு வருகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...