2007 ஆம் ஆண்டு வெளியான ‘கூடல்நகர்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சீனு ராமசாமி, ’தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்ததோடு, தேசிய விருதும் பெற்றிருக்கிறார். இவரது இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ’மாமனிதன்’ ஆகிய இரண்டு படங்கள் உருவாகி, ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
பாலுமகேந்திராவின் சிஷ்யரான சீனு ராமசாமி, தனது எதார்த்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தது போல், அவரது சிஷ்யரும், உடன் பிறந்த தம்பியுமான விஜய் ராமகிருஷ்ணன் இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார்.
சீனு ராமசாமியின் முதல் படமான ‘கூடல்நகர்’ படத்தில் உதவி இயக்குநராகி ’மாமனிதன்’ வரை துணை இயக்குநராக பணியாற்றியிருக்கும் விஜய் ராமகிருஷ்ணன், இயக்குநராக அறிமுகமாவதோடு அப்படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார். இதற்காக ஷஹானா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார்.
தற்போது இப்படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில், இயக்குநராவதோடு முதல் படத்திலேயே தயாரிப்பாளராகியிருக்கும் தனது தம்பி விஜய் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, ”’கூடல்நகர்’ (2007) மூலம் உதவி இயக்குநராகி ’மாமனிதன்’ (2020) வரை துணை இயக்குநராக பணிபுரிந்த என் உடன்பிறந்த தம்பி திரு.விஜய் ராமகிருஷ்ணன். நல் உள்ளத்தார் கூட்டு முயற்சியால் #SAHANAPICTURES நிறுவனம் தொடங்கி, தான் எழுதி, இயக்கி, தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...