பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற சீரியல் ‘தெய்வமகள்’. இந்த சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமான வாணி போஜன், தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான ‘ஓ மை கடவுளே’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால் வாணி போஜனுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
வாணி போஜனை போலவே ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் பல நடிகர், நடிகைகள் மக்களிடம் பிரபலமானார்கள். அவர்களில் ஒருவரான சுஜிதாவை தான் தற்போது போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. அகிலா என்ற கதாப்பாத்திரத்தில் இவர் நடித்தார். அதாவது, பிரகாஷின் இரண்டாவது அண்ணி வேடத்தில் இவர் நடித்து பிரபலமானார்.
சுஜிதாவின் கணவர் மணிகண்டன் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் சுஜிதாவுக்கு படப்பிடிப்பு இல்லாமல் போக, அவரது கணவருக்கும் வேலை இல்லையாம். இதனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அத்தியாவாசிய தேவைகளுக்கே பணம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சுஜிதா தனது கணவரின் அப்பா வீட்டில் இருந்து தங்க நகைகளை திருடி வரும்படி கணவரிடம் சொல்லியிருக்கிறார். அதன்படி, மணிகண்டன் தனது தந்தையின் வீட்டில் இருந்து 18 சவரன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் பணத்தையும் திருடி வந்துள்ளார். இது குறித்து அவரது தந்தை காவல்துறையில் புகார் அளிக்க, விசாரணை மேற்கொண்ட போலீசார் மணிகண்டனை செய்துள்ளது.
கணவன் கைது செய்யப்பட்டதை அறிந்த நடிகை சுஜிதா, தற்போது தலைமறைவாகி விட, போலீஸ் அவரை வலைவீசி தேடி வருவதாக கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...