தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான சினேகன் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், திகில் படம் ஒன்றில் நடிக்க தொடங்கியுள்ளார். ‘ஓஜோ’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ஏ.பிரின்ஸ் ஜொசப் தயாரிக்கிறார். நஞ்சுண்டான் பிச்சாண்டி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
ரவி தேவா இயக்கும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதும் சினேகன் படத்தின் மிக முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார். இதில் ஹீரோவாக சிவசுந்தர் அறிமுகமாக, ஹீரோயின்களாக சுவாதி, லூபானா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் யோகி பாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், திவ்யதர்ஷினி, கும்கி அஸ்வின், இளவரசு, ரோகிணி, லொள்ளு சபா விக்கி, தர்மா, தீனா சக்திவேல் என பெரிய காமெடி நட்சத்திர பட்டாளம் நடிக்கிறார்கள்.
கதைப்படி, நாயகன் சிவாவும், நாயகி பிரியாவும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ, 9 வயது சிறுமி அமானுஷ்யமாக வந்து பிரியாவை பல வழியில் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சிக்கிறது. அப்போது ‘சந்திரமுகி’ ரஜினிகாந்த் போல, எண்ட்ரிக் கொடுக்கும் சினேகன், அந்த சிறுமி யார்? அவள் எதற்காக பிரியாவை கொலை செய்ய முயற்சிக்கிறாள்? போன்றவற்றை ஓஜோ போர்டு மூலம் கண்டறிந்து, அந்த அமானுஷ்யத்திடம் காதல் ஜோடியை எப்படி காப்பாற்றுகிறார், என்பது தான் படத்தின் கதை.
ஓஜோ பலகை மூலம் ஆவிகளிடம் பேசுவதை தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், ஓஜோ பலகையை பயன்படுத்தி பலவிதமான மன ரீதியிலான பிரச்சினையை தீர்த்து வைத்த சம்பவங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்க, அதனை மையமாக வைத்தே இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். வெறும் திகிலை மட்டுமே சொல்லாமல் அதனை வைத்து சில உளவியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறதாம்.
சந்தோஷ் சந்திரபோஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பால பரணி ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக் ஜான்சன் ஆக்ஷன் காட்சிகளை வடிவகைக்க, ராதிகா, ஸ்ரீ செல்வி ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட உள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...