பெண் பின்னணி பாடகரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல போஜ்புரி மொழி திரைப்பட நடிகர் மனோஜ் பாண்டே கைது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பெண் பாடகரை முதன் முதலில் சந்தித்த நடிகர் மனோஜ் பாண்டே, அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டு அந்த பின்னணி பாடகியும் நடிகர் மனோஜுடன் நெருக்கமாக பழக, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளனர்.
அப்படி இருவரும் வாழும் காலத்தில் பாடகி கர்ப்பமடைய, அதை ஏற்காத நடிகர் மனோஜ், கருவை கலைக்குமாறு வலியுறுத்த, அந்த பெண்ணும் கருவை கலைத்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்த மனோஜ், தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண், நடிகர் மனோஜுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாடகியின் புகாரின் பேரில் நடிகர் மனோஜ் பாண்டே மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நேற்று படப்பிடிப்பு தளத்தில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் போஜ்புரி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...