Latest News :

ஹீரோவுடன் படுத்த பிறகே வாய்ப்பு கிடைத்தது! - பிரபல நடிகையின் பதிவால் பரபரப்பு
Friday September-18 2020

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்தியா சினிமா முழுவதும் நடிகைகள் செக்ஸ் புகார் கூறி வருகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‘மீ டூ’ என்ற பெயரில் உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்த இந்த புகார், இந்திய சினிமாவில் தற்போதும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.

 

தற்போது இந்திய சினிமாவில் போதைபொருள் புழக்கம் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் பிரபபல நடிகை ஒருவர், ஹீரோவுடன் படுத்த பிறகே தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக, கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆம், பிரபல பாலிவுட் நடிகை தான் இத்தகைய புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய கங்கனா ரணாவத், தற்போது பாலிவுட் சினிமாவில் போதைபொருள் பயன்படுத்தப் படுவதாக குற்றம் சாட்டி வருகிறார். அவரது குற்றச்சாட்டுக்கு பல நடிகைகள் மறுப்பு தெரிவிப்பதோடு, அவர்களுக்கு பதிலடியும் கொடுத்து வருகிறார்கள்.

 

Actress Kangana Ranawath

 

அந்த வகையில், பாலிவுட் சினிமாவின் முன்னாள் நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயா பச்சன், போதைபொருள் வழக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

இந்த நிலையில், ஜெயா பச்சனின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் கங்கனா ரணாவத், ”பாலிவுட் என்ன கொடுத்தது, 2 நிமிட ரோல், ஐட்டம் பாடல், அதுவும் ஹீரோவுடன் படுத்த பிறகு" என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார். 

 

மேலும், ஹீரோயினை மையப்படுத்திய மற்றும் தேசபக்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனது விதியை தானே மாற்றியதாக, தெரிவித்திருக்கும் கங்கனா, ”அவரது மகள் ஸ்வேதா, துன்புறுத்தப்பட்டால் அல்லது மகன் அபிஷேக் கொடுமைப்படுத்தப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், இதே போல் பேசுவாரா. கொஞ்சம் கருணைகாட்டுங்கள்” என்றும் ஜெயா பச்சனை விமர்சித்துள்ளார்.

 

ஏற்கனவே, சிவசேனா ஆட்சியை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கனா ரணாவத், தற்போது ஜெயா பச்சனையும் விமர்சித்திருப்பதால், அவர் மீது அமிதாப் பச்சன் ரசிகர்கள் கோபமடைந்திருக்கிறார்கள்.

 

 

Related News

6950

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery