கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த மூன்று சீசன்களும் மிகப்பெரிய வெற்றியடைந்திருப்பதால், 4 வது சீசன் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பிக் பாஸ் சீசன் 4-ன் புரோமோ வீடீயோக்கள் வெளியாகியுள்ள நிலையில், போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு தகவலை பிக் பாஸ் குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதே சமயம், பிக் பாஸ் போட்டியாளர்களின் பட்டியல் சில அவ்வபோது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளர்கள் தேர்வு குறித்து கமல்ஹாசன் நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பு கண்டிஷன் ஒன்று போட்டுள்ளாராம். அதாவது, யாரை வேண்டுமானாலும் போட்டியாளராக தேர்வு செய்துக் கொள்ளுங்கள், ஆனால் போட்டியாளராக ஒரு திருநங்கை நிச்சயம் இருக்க வேண்டும், என்று கண்டிஷன் போட்டுள்ளாராம்.
கமல்ஹாசனின் இந்த கண்டிஷனை ஏற்றுக் கொண்ட பிக் பாஸ் 4 குழு போட்டியாளராக திருநங்கை ஒருவரை தேர்வு செய்துவிட்டார்களாம். அவர் யார்? என்பதை மட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கும் போது தான் அறிவிப்பார்களாம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...