‘மெர்சல்’ தலைப்பு தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் தடை வாங்கியதால், அப்படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் ரொம்பவே மெர்சலாகியுள்ளது.
ரூ.132 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ‘மெர்சல்’ படத்தை வைத்து தியேட்டர் வசூல் மட்டும் இன்றி, மெர்சல் என்ற பெயரை வைத்து டீ-சர்ட் உள்ளிட்ட சில வணிக பொருட்களையும் தயாரித்து விற்பனையில் விடும் நோக்கத்தில், அந்த வார்த்தைக்கு டிரேட் மார்க் வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு, நீதிமன்றத்தின் இடைக்கால தடை இடியாக விழுந்துள்ளது.
இதற்கிடையே, நீதிமன்றத்தின் தடையால் ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகு என்று நேற்று தகவல்கள் பரவ, இது தொடர்பாக நிருபர்கள், மெர்சல் படக்குழுவினரிடம் விசாரிக்கையில், படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும், கடவுள் இருக்கிறார், என்ற பதில் மட்டுமே வந்தது.
இந்த நிலையில், மெர்சல் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை, வெளிநாட்டிக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ள விஜய்க்கு காதுக்கு போக, மனுஷன் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டாராம்.
தனது ஒவ்வொரு படத்தின் போதும், இப்படி யாராவது, எதாவது பிரச்சினையை கிளப்பி விட்டுக்கொண்டிருப்பது வழக்கமாகிவிட்டதை, எண்ணீ ரொம்பவே கவளையடைந்த விஜய், விரைவில் சென்னை திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்...
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ’தண்டேல்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...