தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. அதன் காரணமாக சில துறைகள் செயல்பட அரசு அனுமதி அளித்து வருகிறது. அதன்படி, சீரியல் படப்பிடிப்புகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்த தமிழக அரசு தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களிடம் பிரபலமாக உள்ள தொடர்களில் ஒன்று ‘அரண்மனைக்கிளி’. இத்தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மோனிஷா. தற்போது ‘அரண்மனைகிளி’ தொடர் ஒளிபரப்பாகாத நிலையில், மலையாள தொடர் ஒன்றில் மோனிஷா நடித்து வருகிறார். மலையாள தொடர் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துக் கொண்ட மோனிஷாவுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போக, பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், அந்த படப்பிடிப்பில் இருந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அப்படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீரியல் படப்பிடிப்பால் இப்படி பலருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதால், திரைபிரபலங்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...