பிரபலங்கள் பற்றி அவதூறாக பேசி பிரபலமடையும் வழியை பலர் பின்பற்ற தொடங்கியுள்ளார்கள். அப்படி ஒரு வழியை பின் தொடரும் மீரா மிதுன், கடந்த சில மாதங்களாகவே தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொள்ள பிரபலங்கள் பலரை விமர்சித்து பேசுவதோடு, தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் பல்வேறு விஷயங்கள் குறித்து விமர்சித்து வருகிறார்.
இதனால் மீரா மிதுனை நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வரும் நிலையில், அவரும் சலிக்காமல் தொடர்ந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலம் அவருக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவால் அவர் விரைவில் கைதாகவும் இருக்கிறார்.
அதாவது, #SaveTemplesFromBrahmanism என்ற ஹேஷ் சமீபத்தில் டிரெண்டானது. இதனை வைத்து பதிவு ஒன்று வெளியிட்ட மீரா மிதுன், அதில், “இது ஒரு முன்னுரிமையின் பேரில் செய்யப்பட வேண்டும். கோயில்களில் முன்னுரிமையின் இல்லை கோலிவுட் கூட பிராமணியத்தின் பிடியில் உள்ளது. பிற ஆதிக்க சமூகம் இந்த பிராமணிய கருத்தியலால் வழிநடத்தப்படுகிறது. இதைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை பேசியுள்ளேன். இதற்கு விரைவில் மு க ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழகத்தில் தமிழர்கள் மட்டுமே தங்க வேண்டும். நான் முதலமைச்சர் ஆனால், தெலுங்கர்கள், மலையாளிகள் என அனைவரையும் தமிழகத்தை விட்டு விரட்டியடிப்பேன், என்றும் மீரா மிதுன் கூறியிருந்தார். மீரா மிதுனின் இந்த பதிவால் வழக்கம் போல ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, கேரள மக்கள் குறித்து அவதூறாக பேசிய மீரா மிதுன் மீது கேரள காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறதாம். இதனால் மீரா மிதுன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...