இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தகவல் வெளியானாலும், ‘இந்தியந்2’ படத்தை இயக்கும் முயற்சியில் ஷங்கர் இருக்க, அதற்கு கமலும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால், தற்போது ஷங்கர் - அஜித் கூட்டணி அமையா வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அஜித்தின் அடுத்ட படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி கோடம்பாக்கத்தினரிடையே பலமாக எழும்ப, அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் அளவுக்கு அமைந்திருக்கிறது அஜித்தின் முடிவு.
ஆம், நான்காவது முறையாக சிவாவுக்கு வாய்ப்பு கொடுக்க அஜித் முடிவு செய்துவிட்டாராம். இந்த படத்தை கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாக, ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். பிரபல ஆங்கில சேனலை நடத்தும் அந்த கார்ப்பரேட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தாலும், இந்த படத்திற்கான பட்ஜெட்டில் பாதியை அஜித் தரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் என்று தொடர்ந்து அஜித்தை வைத்து இயக்கிய வசூலில் எந்த சாதனையையும் நிகழ்த்தாத சிவா, விவேகம் படத்தை மிகப்பெரிய தோல்விப் பட்மாக கொடுத்தும், அவருடன் அஜித் மீண்டும் இணைந்திருப்பதும், படத்தின் தயாரிப்பில் பாதியை முதலீடு செய்வதும், சொந்த பணத்தில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம், என்று கோடம்பாக்க டீ கடைகளில் பேசி வருகிறார்கள்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...