தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி, இவரது அண்ணன் தான் இயக்குநர் மோகன் ராஜா என்பதும், இவர்களது அப்பா தான், தயாரிப்பாளரும் படத்தொகுப்பாளருமான மோகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அது மட்டும் அல்ல, ஜெயம் ரவியின் மாமியார் பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் ஆவார். இவர் ஜெயம் ரவியை வைத்து ‘அடங்க மறு’ என்ற படத்தை தயாரித்திருந்த நிலையில், இரண்டாவதாக ‘பூமி’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.
ஜெயம் ரவியின் 25 வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை லஷ்மண் இயக்கியுள்ளார். இதில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டெட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் வெளியாகமல் இருந்த இப்படம் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்திற்கு விற்கப்பட்டு விட்டதாகவும், அதனால், செப்டம்பர் 27 ஆம் தேதி நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் ‘பூமி’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், ஜெயம் ரவியின் மாமியார் கேட்ட விலை ரொம்ப அதிகம் என்று கருதிய ஹாட்ஸ்டார் நிறுவனம் படத்தை வாங்க மறுத்துவிட்டதாம். நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய ரூ.45 கோடி கொடுக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறினாராம். ஆனால், ரூ.25 கோடி மட்டுமே கொடுக்க முடியும் என்று ஹாட்ஸ்டார் கூறிவிட்டார்களாம். இதனால், பூமி படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை.
மேலும், அமேசான் உள்ளிட்ட மேலும் சில ஒடிடி தளங்களிலும் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்த அவர்களும், சுஜாதா விஜயகுமார் கேட்ட தொகையால், படத்தை வாங்க தயங்குகிறார்களாம்.
‘கோமாளி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவியின் நடிப்பில் ‘பூமி’ வெளியாவதால், அப்படம் பெரிய விலை போகும் என்று எதிர்ப்பார்த்த ஜெயம் ரவியின் குடும்பம், படம் தற்போது வரை விலைபோகாததால் கவலையில் இருக்கிறார்களாம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...