’ஹர ஹர மஹாதேவகி’ என் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தோஷ் பி.ஜெயக்குமார், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது முதல் படத்தை இயக்கினாலும், அதில் இரட்டை அர்த்த வசனங்களை வாரி தெளித்திருப்பார். இதனால், இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற, தனது அடுத்தப் படத்தை அறிவித்த இயக்குநர் சந்தோஷ், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பில் அடல்ட் காமெடி படத்தை இயக்கினார்.
இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று பெரும் லாபத்தை ஈட்டினாலும், இப்படத்தை சினிமா பிரபலங்கள் பலர் விமர்சித்ததோடு, இப்படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இரண்டு பேரையும் கழுவு ஊற்றினார்கள். இதனால், இதுபோன்ற படத்தை இனி எடுக்க மாட்டேன், என்று கூறிய இயக்குநர் சந்தோஷ், ஆர்யா மற்றும் சாயீஷாவை வைத்து ‘கஜினிகாந்த்’ என்ற படத்தை இயக்கினார். குடும்பத்தை மையப்படுத்திய நகைச்சுவைப் படமான இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதற்கிடையே, தனது மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்த இயக்குநர் சந்தோஷ், அப்படத்தின் தானே ஹீரோவாக களம் இறங்கப் போவதாகவும் அறிவித்தார். அதன்படி, படப்பிடிப்பையும் தாய்லாந்தில் தொடங்கியவர், தொடர்ந்து அங்கேயே நடத்தினார்.
கொரோனா பிரச்சினையால் தனது படத்தின் வேலைகளை பாதியில் நிறுத்திய இயக்குநர் சந்தோஷ், தற்போது தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியிருப்பதோடு, படத்திற்கு ‘இரண்டாம் குத்து’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
இந்த நிலையில், ‘இரண்டாம் குத்து’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்ப்பவர்கள் அனைவரும் முகம் சுழிக்க செய்கிறார்கள். அந்த அளவுக்கு போஸ்டரில் ஆபாசத்தை இயக்குநர் அள்ளி தெளித்திருக்கிறார்.
அதை நீங்களே பாருங்க,
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...