தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, கதாநாயகிகளை மையப்படுத்திய படங்களில் நடிப்பதோடு, முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். மொத்தத்தில், கை நிறைய பட வாய்ப்புகளும், பல கோடி சம்பளமும் என்று அவரது சினிமா வாழ்க்கை திருவண்ணாமலை தீபம் போல பிரகாசமாக உள்ளது.
என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவ்வபோது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும், அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதையும் நயன்தாரா தவறாமல் செய்கிறார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு இருந்ததால் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்கும் நயன், சமீபத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளை பயன்படுத்தி, தனது காதலர் விக்கியுடன் குட்டி சுற்றுலா சென்றிருக்கிறார்.
இப்படி வருட கணக்கில் தனது காதலருடன் சுற்றுப் பயணம் செல்லும் நயன்தாராவிடம் அனைவரும் கேட்பது, எப்போது திருமணம்? என்று தான். மற்றவர்களைப் போல் விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் திருமணத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, இந்த வருடம் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதே சமயம், நயன்தாராவுக்கு திருமண தோஷம் இருப்பதாக அவரது ஆஸ்த்தான ஜோதிடர் கூறியிருப்பதால், அதற்கான பரிகாரம் செய்துவிட்டு தான் திருமணம் செய்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நயன்தாரா தனது திருமணம் தொடர்பாக புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். அதாவது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற பிறகே திருமணம் செய்துக் கொள்வாராம். அவரது இந்த முடிவால், அவரது காதலர் விக்னேஷ் சிவன் அதிர்ச்சியடைந்துள்ளாராம்.
‘அறம்’ படத்திற்கே நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டியது. ஒரு சில காரணங்களால் நழுவிப்போன அவ்விருதை நிச்சயம் வென்றே தீருவேன், என்று நயன் சபதம் எடுத்தது சரி தான். ஆனால், அதற்காக திருமணத்தை நிறுத்தியது சரியா? என்று விக்னேஷ் சிவன் தன்னை தானே கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...