தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி போட்டவர், தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
35 வயதாகும் காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவ்வபோது தகவல் வெளியாகும். நம் தளத்தில் கூட இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளோம்.
இந்த நிலையில், காஜல் அகர்வதால் தனது திருமணத்தின் அறிவிப்பை இன்று அறிவித்துள்ளார். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் கிச்சலு என்பவரை தான் காஜல் அகர்வால் திருமணம் செய்து கொள்ள போகிறார். வரும் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் காஜல் அகர்வால் - கெளதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்கள்.
காஜலை திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் கெளதம் கிச்சலு தொழிலதிபர் என்பது தெரியும், ஆனால் அவர் என்ன தொழில் செய்கிறார், என்பது பலருக்கு தெரியாது அல்லவா, இதோ அந்த பிரத்யேக தகவல்.
வீடுகளில் டிசைனிங் அறைகளை தயார் செய்து கொடுப்பது, விதவிதமான மின் விளக்குகளை வடிவமைப்பது தான் கெளதம் கிச்சலுவின் தொழில். அவரே பிரத்யேகமான டிசைன்களை உருவாக்குவாராம். அவரது டிசன்களுக்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதால், மும்பையின் பல முக்கிய புள்ளிகளின் வீடுகளை சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறாராம்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...