Latest News :

‘கபடதாரி’ படக்குழு கொடுத்த சர்பிரைஸ்! - மகிழ்ச்சியின் உச்சத்தில் சிபிராஜ்
Tuesday October-06 2020

கோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான சிபிராஜ், இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவினர் சர்பிரைஸ் பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்கி அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

 

கொரோனா பாதிப்பால் பெரிதும் பாதிப்படைந்த சினிமாத்துறை தற்போது மெல்ல தலை தூக்க தொடங்கியுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பாதியில் நின்று போன படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், இம்மாதம் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.

 

இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’ படத்தின் ஹீரோ சிபிராஜுக்கு சர்பிரைஸ் பரிசு வழங்க நினைத்த ‘கபடதாரி’ படக்குழுவினர் படத்தின் பஸ்ட் லுக்கை இன்று வெளியிடுவதாக அறிவித்ததோடு, சிபிராஜிக்கு பிடித்த ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவே, பஸ்ட் லுக்கை வெளியிடும்படியும் செய்துள்ளார்கள்.

 

இது பற்றி சிபிராஜுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், நேற்று இரவு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டதும், சிபிராஜ் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். அவரைப் போல அவரது ரசிகர்களும் ‘கபடதாரி’ பஸ்ட் லுக் ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள்.

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திர, ஹேமந்த் ராவ் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். சிமோன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

Kabadadaari Poster

Related News

6981

”அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் எனக்கு ஜோடி” - சத்யராஜ் உற்சாகம்
Sunday February-02 2025

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

”’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை” - படக்குழு நெகிழ்ச்சி
Sunday February-02 2025

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

Recent Gallery