பிக் பாஸ் சீசன் 4 தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்களாக நடிகை ரேகா, சீரியல் நடிகை ஷிவாணி, பாடகர் வேல் முருகன், அரந்தாங்கி நிஷா, மாடலிங் துறையை சேர்ந்த பாலா, சக்யுக்தா, சோம சேகர், ஆஜித், நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ரியோ ராஜ், கேப்ரில்லா, நடிகர் ஜித்தன் ரமேஷ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை சனம் ஷெட்டி, நடிகர் ஆரி அர்ஜுனன் என 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
பிக் பாஸ் போட்டியின் மிக முக்கியமானது எலிமினேஷன் ரவுண்ட். அதாவது ஒவ்வொரு வாரம் வரும் இந்த எலிமினேஷன் ரவுண்ட் மூலம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். இந்த எப்பிசோட் போட்டியாளர்களிடம் மட்டும் இன்றி ரசிகர்களிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 4-ன் முதல் எலிமினேஷன் ரவுண்ட் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான நான்கு போட்டியாளர்களை தேர்வு செய்யும் பொருப்பு பாலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் நடிகைகள் ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா மற்றும் கேப்ரில்லா ஆகிய நான்கு பேரை தேர்வு செய்துள்ளார்.
இந்த நான்கு பேர்களில் ஒருவர் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருக்கும் நிலையில், இவர்களில் நடிகை ரேகா தான் வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...